மத்தியப் பிரதேசம் மாநிலம், சிவ்புரி மாவட்டத்தில் பெண்ணிடம் தவறாக நடக்கமுயன்றாதாக கூறப்பட்ட ஒரு இளைஞரை தாக்கிய ஒரு கும்பல், அவரை மனிதக்கழிவு சாப்பிட வைத்து மனிதத்தன்மை அற்று கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள வினேகா என்ற கிராமத்தைச் சேர்ந்த காலு தாக்கத் இளைஞருக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

காலு தாக்கத் அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். அதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தார் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில், அந்த பெண்ணை தோட்டத்தில் சந்தித்து பேசியபோது, அதை பெண்ணின் குடும்பத்தினர் பார்த்துவிட்டனர். கூறி பொதுமக்கள் முன்னிலையில் அடித்து, உதைத்து மனித கழிவு  உண்ண வைத்துள்ளனர்.

இளைஞரை அடித்து உதைத்து சித்திரவதை செய்தது மட்டுமல்லாமல், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதனை மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்திலும் பரவ விட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் காலு தாக்கத்திடம் நடத்திய விசாரணையில் கூறுகையில் “ நானும், அந்த இளம்பெண்ணும், தானும் காதலித்து வந்ததாகவும், இது பெண் வீட்டாருக்கு பிடிக்காததால் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க அவர்கள் திட்டமிட்டனர்.

அந்த பெண்ணை நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை அந்தப் பெண்ணுடன் தோட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது,  பெண்ணின் சகோதரன்  பார்த்துவிட்டு அவரின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்ததன் பேரில் எனக்கு இந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டது’’ எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பாதிக்கப்பட்ட இளைஞரும், இளம்பெண்ணும் அருகருகே வசித்து வந்துள்ளனர், இளம்பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகளை குறித்த இளைஞர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக துன்புறுத்தி வருவதாக புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த இளைஞர் மீதும், அவரை அடித்து துன்புறுத்தி, சித்திரவதை செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய பெண்ணின் குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.