மொபைல் போன் வைத்துக்கொள்ளாமல், வர்த்தகத்திலும், தொழிலிலும் ஈடுபட விருப்பமில்லாமல், மும்பையில் எளிமையாக வாழ்ந்து வருகிறார், கோடீஸ்வரர், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இளைய சகோதரர்.
மொபைல் போன் வைத்துக்கொள்ளாமல், வர்த்தகத்திலும், தொழிலிலும் ஈடுபட விருப்பமில்லாமல், மும்பையில் எளிமையாக வாழ்ந்து வருகிறார், கோடீஸ்வரர், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இளைய சகோதரர்.
இந்த செய்தி அனைவருக்கும் நம்பமுடியாமல்தான் இருக்கும், ஆனாலும், நம்பித்தான் ஆக வேண்டும்.
சமீபத்தில் டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பால்யவயதுப் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் தானும், தன்னுடைய இளைய சகோதரர் ஜிம்மி டாடாவும் நாய்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
ஜூன் மாதத்திற்கு பிறகு இந்தியாவை பொருளாதார மந்தநிலை தாக்கும்.. மத்திய அமைச்சர் நாராயண் ரானே தகவல்!
கறுப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்டஅந்த புகைப்படம் கடந்த 1945ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தின் கீழ் டாடா குறிப்பிடுகையில் “ அந்தநாட்கள் இனிமையானவை. எங்களுக்கு இடையே ஏதும் குறுக்கிடவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இந்த புகைப்படத்துக்கு 70 லட்சம் லைக்குகள் வந்திருந்தன.
பெரும்பாலானோருக்கு ஜிம்மி டாடா எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை. டாடா சன்ஸ், உள்ளிட்ட டாடா குழுமத்தில் பங்குதாரராக ஜிம்மி டாடா இருந்தாலும், மும்பையி்ல் உள்ள கொலாபா பகுதியில், 2படுக்கைஅறை கொண்ட ஒரு பிளாட்டில் எளிமையாக ஜிம்மி டாடா வாழ்ந்து வருகிறார்
82வயதான ஜிம்மி டாடா சொந்தமாக மொபைல் போன்கூட வைத்துக்கொள்வதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகவும் எளிமையாக, ஊடக வெளிச்சத்தில் வராமல், ஜிம்மா டாடா வாழ்ந்து வருகிறார்
ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா கடந்த 2020ம் ஆண்டில் ஜிம்மி டாடா குறித்த புகைப்படத்தைப் பகிர்ந்து அவரை உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். கோயங்கா குறிப்பிடுகையில் “ ரத்தன் டாடாவின் இளைய சகோதரர் ஜிம்மி டாடா பற்றி உங்களுக்குத் தெரியுமா. மும்பையில் கொலாபாவில் 2பிஎச்கே பிளாட்டில் எளிமையாக இன்னும் வாழ்ந்து வருகிறார். தொழிலிலும், வர்த்தகத்திலும் விருப்பமில்லாத மனிதர், சிறந்த ஸ்குவாஷ் வீரர் ஜிம்மி டாடா. பலமுறை என்னை விளையாட்டில் தோற்கடித்துள்ளார்.டாடா குழுமத்தில் எளிமையான மனிதர் ஜிம்மி டாடா” எனத் தெரிவித்தார்
தேசத்திடம் பிரதமர் மோடியும், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனும் எதை மறைக்கிறார்கள்? காங்கிரஸ் கேள்வி
டாடா சன்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடாஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா பவர் என அனைத்திலும் ஜிம்மி டாடாவுக்கு பங்குகள் இருந்தாலும், தொழிலிலும், வர்த்தகத்திலும் அவருக்கு சிறிதும் விருப்பமில்லை. ரத்தன் டாடா இறந்தபின், அவரின் மனைவி நவாபாய், நடுத்தர பார்சி குடும்பத்தில் இருந்து ஜிம்மி டாடாவை தத்தெடுத்து வளர்த்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு 2016ல் வெளியிட்ட செய்தியில் ஜிம்மி டாடா தனதுதந்தை மறைவுக்குப்பின் ஒரு பப்ளிகேஷன் தொடங்கி வாழ்க்கை நடத்தினார் எனத் தெரிவித்துள்ளது
