கேரளாவில் கடலில் குதித்து தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கொச்சியில் தற்கொலை செய்ய பாலத்தின் மேல் இருந்து இளம்பெண் ஒருவர் கடலில் குதித்துள்ளார். 

இதையடுத்து அந்த இடத்தில் பெரும் கூட்டம் கூடி இருப்பதை கண்டு  19 வயதான இளைஞர் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். அப்போது யாரோ கடலில் விழுந்து விட்டார்கள் என்று கூறியுள்ளனர். 

இதைதொடர்ந்து ஜீவன் என்ற அந்த இளைஞர் ஒரு கணம் கூட யோசிக்காமல் கடலில் குதித்தார். கடலில் தத்தளித்து கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை தூக்கி தோலில் போட்டு நீந்தி கரை வந்து சேர்ந்துள்ளார். 

உடலின் பாரம் தங்க முடியாமல் களைத்து போன அவரும் மயங்கிய நிலையிலேயே கரை ஒதுங்கினார். 

இதையடுத்து பொதுமக்கள் ஒடி சென்று இருவரையும் கரைக்கு இழுத்து வந்தனர். ஜீவனின் பெயரை குடியரசு தலைவரின் வீர விருதுக்கு பரிந்துரைக்க இருப்பதாக கொச்சி காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.