சந்திரயான் 3க்கு குரல் கொடுத்தவர்.. இஸ்ரோ மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி திடீர் மரணம் - விஞ்ஞானிகள் இரங்கல்
சந்திரயான்-3 திட்டம் உட்பட பல ராக்கெட் ஏவுகணைகளின் கவுன்ட் டவுனின் போது குரல் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை 1.4 பில்லியன் ஆகும். இருப்பினும் ஒரு சிலரது குரல்கள் மட்டுமே மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கின்றன. இந்த பட்டியலில் பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உள்ளனர்.
இஸ்ரோ ராக்கெட் ஏவுதலின் போது கவுண்ட்டவுன் மிக முக்கியமான நிகழ்வு ஆகும். இது முழு தேசத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு சின்னமான நிகழ்வு. இந்த கவுண்டவுன் குரல், சோதனையின் நேரடி ஒளிபரப்பைக் காண கோடிக்கணக்கான மக்களை தங்கள் டிவி மற்றும் செல்போன்களைப் பிடிக்கச் செய்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுன்ட் டவுனில் குரல் எழுப்பிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் அவதிப்பட்டு வந்தார் என்று கூறப்படுகிறது.அவர், சென்னையில் உள்ள மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்திரயான்-3 உட்பட பல இஸ்ரோ ஏவுதல்களுக்கு அவர் பொறுப்பேற்றுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரோ இயக்குனர் டாக்டர். வேங்கட கிருஷ்ணன், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் எதிர்கால பயணங்களின் கவுண்டவுன்களுக்கு வளர்மதி மேடத்தின் குரல் இருக்காது. சந்திரயான் 3 அவரது இறுதி கவுண்டவுன் அறிவிப்பு. எதிர்பாராத மரணம். மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். பலரும் வளர்மதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குட் நியூஸ்.. எஃப்டிக்கு 8%க்கும் அதிகமாக வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்.. என்னென்ன தெரியுமா.?