ஏற்கனவே நியூஸ் கிளிக்ஸ் நிறுவனம் குறித்து ஒரு பெரிய சர்ச்சை வெடித்துள்ள நிலையில் தற்போது அந்த நிறுவனத்தின் X (ட்விட்டர்) சமூகவலைத்தள பக்கம் முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், அந்த நிறுவனத்தின் பிற சமூக வலைதள பக்கங்கள் ஆக்டிவாக உள்ளது.
என்ன நடந்தது?
நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு செய்திக் கட்டுரை மூலம் தெரியவந்துள்ள தகவல் பின்வருமாறு.. இந்திய செய்தி இணையதளமான நியூஸ் கிளிக், சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நெவில் ராய் சிங்கம் என்ற அமெரிக்கா தொழிலதிபரின் மின்னணு அஞ்சல் (Email) பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் பல்வேறு பத்திரிகையாளர்கள், மேலும் நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் சிபிஐ(எம்) தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட அவரது குழுவினருக்கு சீன பிரச்சாரத்தை ஊக்குவிக்குமாறு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதற்கிடையில், மொத்தம் 255 குடிமக்கள் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் ஆகியோருக்கு, அந்த ஊடக நிறுவனத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Metro Train : வெறும் 59 ரூபாய்க்கு மெட்ரோவில் அன்லிமிடெட் பயணம் - முழு விபரம் இதோ !!
அந்த 255 பேர் கொண்ட பட்டியலில் பல உயர்மட்ட நபர்கள் உள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது. குறிப்பாக முன்னாள் நீதிபதிகள், ராணுவ படைவீரர்கள் மற்றும் பல அதிகாரிகள் எழுதிய கடிதத்தில் "சுதந்திர பத்திரிகை' என்ற போர்வையின் கீழ் அனைத்து வகையான விரோத சக்திகளுக்கும் நாம் மிகவும் பரந்த செல்வாக்கை வழங்குகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த் செய்தி நிறுவனம் குறித்த விசாரணை தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED) நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மனு தாக்கல் செய்ததை அடுத்து, நியூஸ் கிளிக் மற்றும் அதன் நிறுவனர் பிரபீர் புர்கயஸ்தாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நியூஸ் கிளிக்கிற்கு எதிராக எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று கூறிய 2021 ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்யுமாறு மத்திய நிறுவனம் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்றும் மத்திய அரசு! 3 புதிய மசோதாகளுக்கு சட்ட வல்லுநர்கள் வரவேற்பு!
