Metro Train : வெறும் 59 ரூபாய்க்கு மெட்ரோவில் அன்லிமிடெட் பயணம் - முழு விபரம் இதோ !!
வெறும் 59 ரூபாய்க்கு மெட்ரோவில் அன்லிமிடெட் பயணம் செய்யலாம். இதனைப் பற்றிய முழுமையான விவரங்களை காணலாம்.

இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினத்தை கொண்டாட ஹைதராபாத் மெட்ரோவும் தயாராக உள்ளது. இதை மனதில் வைத்து ஹைதராபாத் மெட்ரோ ரயில் (எச்எம்ஆர்) வெள்ளிக்கிழமை ‘சூப்பர் சேவர் ஃப்ரீடம் ஆஃபரை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சலுகையின் கீழ், ஆகஸ்ட் 12, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பயணிகள் வரம்பற்ற மெட்ரோ பயணத்தை வெறும் 59 ரூபாய்க்கு அனுபவிக்க முடியும். இந்தச் சலுகையைப் பெற, பயணிகள் தங்களது சூப்பர் சேவர் மெட்ரோ ஹாலிடே கார்டை ரூ. 59க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
நீட்டிக்கப்பட்ட சுதந்திர தின வார இறுதியில் பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தச் சலுகை வழங்கப்படுவதாக HMRL தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதைத் தாண்டி, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, நிலையான நடமாட்டத்தை ஊக்குவித்தல் மற்றும் பசுமையான சூழலை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் நகரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிப்பது இதன் நோக்கமாகும்.
எச்எம்ஆர்எல் சுற்றுச்சூழலைப் பற்றி விழிப்புடன் இருப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!