Asianet News TamilAsianet News Tamil

திருப்பதி போறீங்களா..? இதை கட்டாயம் செஞ்சே ஆகணும்... தேவஸ்தானம் அதிரடி..

திருப்பதி வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனைசெய்ததற்கான சான்றை கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்து இருக்கிறது.

The tirumala tirupati devasthanam temple has announced that devotees coming to Tirupati will have to bring proof of corona testing
Author
Tirupati, First Published Jan 25, 2022, 6:45 AM IST

இந்தியா முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருமலை - திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற, ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இல்லாமல் திருமலைக்கு வருகின்றனர். 

The tirumala tirupati devasthanam temple has announced that devotees coming to Tirupati will have to bring proof of corona testing

அவ்வாறு வரும் பக்தர்களை அலிபிரி சோதனைச் சாவடியில் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஊழியர்கள் கண்டறிந்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். சமீபத்தில் கொரோனா தொற்று 3-வது அலை பரவும் அபாயம் சூழல் ஏற்படுகிறது. 

The tirumala tirupati devasthanam temple has announced that devotees coming to Tirupati will have to bring proof of corona testing

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், 48 மணிநேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் பக்தர்களுக்கு அறிவுறுத்துகிறது. அவ்வாறு வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இல்லையேல், திருப்பி அனுப்பப்படுவார்கள்’ என்று கூறியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios