PMLA judgment: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற சட்டம் மறுஆய்வு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
சட்டவிரோதப் பணப்பரிமற்றச் சட்டத்தின் இரு கூறுகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமற்றச் சட்டத்தின் இரு கூறுகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற சட்டத்தில் அமலாக்கப்பிரிவுக்கு கூடுதல் அதிகாரிகள் வழங்கியது தொடர்பாகவும், சில திருத்தங்கள் மத்திய அரசு செய்ததை எதிர்த்து 250க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனு மீதான விசாரணை முடிந்த கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, அளித்த தீர்ப்பில் “ அமலாக்கப்பிரிவு சட்டவிரோதப் பணப்பரிமாற்றச்சட்டத்தின் கீழ் கைது செய்யவோ, சொத்துக்களை முடக்கவோ, ப றிமுதல் செய்யவோ, சீல் வைக்கவோ அதிகாரம் உண்டு.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு முதல் தகவல் அறிக்கையை அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. “ என்று உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சிடி ரவிகுமார் இன்று தீர்ப்பு வழங்கினர்.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில் “ இந்த வழக்கில் இரு அம்சங்களை மறு ஆய்வு செய்ய நீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது. ஒன்று, அமலாக்கப்பிரிவினர் வழக்கின் நகலை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கத் தேவையில்லை என்ற அம்சத்தையும், குற்றம்சாட்டப்பட்டவர் தன்மீது குற்றம் இல்லை என்று நீருபிக்க வேண்டும்,
ஆனால், விசாரணை அமைப்பு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். அதேசமயம், சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தில் முழுமையாக நம்பிக்கை உண்டு” எனத் தெரிவித்தார்.