The State Bank of India has announced a loss of crore after 20 years.
20 ஆண்டுகளுக்கு பிறகு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு ரூ.155 கோடி இழப்பை எஸ்பிஐ வங்கி சந்தித்து இருந்தது. அதன் பிறகு சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக இழப்பை சந்திக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ரூ.2416 கோடி அளவு இழப்பை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சந்தித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வங்கியின் வாராக்கடன் ரூ.23,000 கோடியாக அதிகரித்ததுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏறக்குறைய ரூ.25,830 கோடி கடன்கள் வாரா கடனாக மாறிவிட்டது எனவும் அடுத்து வரும் காலாண்டுகளில் வாராக்கடன் அளவை குறைக்க சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடன் கொடுத்தவர்களின் கடனை திருப்பி வசூலிப்பதில் கடுமையான நிலைப்பாட்டை எஸ்பிஐ எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
