The salaries of MLA and MPs are no longer on the website - Punjab Government Action

பஞ்சாப் மாநில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வாங்கும் மாத ஊதியம், இதர படிகள், சொத்துக்கள் விவரம் ஆகியவற்றை பொது மக்கள்பார்க்கும் வகையில் மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வௌியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபில் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் ஊதியம், படிகள், சொத்துக்கள் விவரங்களை இணையதளத்தில் மக்கள் பார்க்குமாறுவௌியிடுவோம் என வாக்குறுதி அளித்து இருந்தது.

மேலும், ஆண்டு தோறும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின்சொத்துப்பட்டியிலும் வௌியிடப்படும் எனக் கூறி இருந்தது. அதன் முதல் நடவடிக்கையாக இப்போது அரசின் இணையதளத்தில்வௌியிட உள்ளது.

இது தொடர்பான அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை வௌியிட்டுள்ளதுஎன அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக பொது நிர்வாகத் துறை சார்பில், சட்டசபைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேலும், போலீசாருக்கும் வேலை நேரத்தை ஒழுங்கு படுத்தும் வகையில், குறிப்பிட்ட நேரம் மட்டும் பணியாற்றும் திட்டத்தை கொண்டு வர உள்ளது. அவசர நேரங்கள் தவிர போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் பணி நேரத்தில் மட்டும் வந்தால் போதுமானது. இதன் மூலம் அவர்களின் பணிச்சூழலை மேம்படுத்தி, குடும்பத்தினருடன் அதிகம நேரம் செலவு செய்ய வசதி ஏற்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.