Asianet News TamilAsianet News Tamil

‘மொபைல் ஆதாரை’ அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் - ரெயில்வே துறை அறிவிப்பு

The Railway Department yesterday announced that any class of passengers traveling on a mobile phone can be used as a signature documentwhich is downloaded on the mobile phone.
The Railway Department yesterday announced that any class of passengers traveling on a mobile phone can be used as a signature document,which is downloaded on the mobile phone.
Author
First Published Sep 13, 2017, 8:56 PM IST


மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட, டிஜிட்டல் பதிப்பு ஆதாரை, பயணத்தின்போது, அடையாள ஆவணமாக எந்த வகுப்பில் பயணிக்கும் பயணிகளும் பயன்படுத்தலாம் என்று ரெயில்வே துறை நேற்று அறிவித்தது.

ஆதார் வழங்கும் அமைப்பான ‘உதய்’ அமைப்பு மொபைல் ஆப்ஸ்(செயலி) வௌியிட்டுள்ளது. அந்த செயலியை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம், எந்த தனிநபரும் தனது ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெற முடியும்.  ஆனால், பதவிறக்கம் செய்யும்போது, ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஸ்மார்ட்போனில் இந்த ஆதார்-அட்டையை பதிவிறக்கம் செய்தபின், தேவைப்படும் நேரங்களில், பாஸ்வேர்டை பயன்படுத்தி, ஆதார் அட்டையை ரெயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் காண்பிக்கலாம்.

இது குறித்து ரெயில்வே அமைச்சகம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “ ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யக்கூடிய வகையில் இருக்கும் டிஜிட்டல் முறையான ஆதார் அட்டையை பயணிகள் தங்களின் பயணத்தின்போது, அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம். ரெயில்வே பயணத்தில் எந்த வகுப்பில் பயணிப்பவர்களும் இதை ஆவணமாக பயன்படுத்தலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios