The poor living in the platforms the railway packages in winter
பிளாட்பாரங்களில் வசிப்போர், குளிர் காலத்தில், இரவு நேரங்களில் தங்குவதற்கு, பழைய ரயில் பெட்டிகளை பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக தெலங்கானா அரசு 16 உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெட்டிகளை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடின்றி சாலை ஓரங்களில் வசித்து வருகின்றனர். மழை மற்றும் குளிர் காலங்களில், தங்குவதற்கு இடமின்றி சிரமப்படுவதுடன், நூற்றுக்கணக்கில் உயிரிழக்கின்றனர்.
உத்தரவு:
பிளாட்பாரங்களில் வசிப்போருக்கு, ஒரு லட்சம் மக்கள் தொகை உடைய, 62 நகரங்களில், இரவு தங்குமிடங்களை அமைக்கும்படி, மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் கடந்த, 2010ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, பழைய, பயன்படுத்தாத ரயில் பெட்டிகளில், மின் இணைப்பு, கழிப்பறை போன்ற வசதிகளை செய்து, தேவைப்படும் இடங்களில் நிறுவ, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளது.
தெலங்கானா
இந்த திட்டத்துக்கு தெலங்கானா அரசு 2017-18ம் ஆண்டில் 21 பகுதிகளில் ரெயில் பெட்டிகள் வைக்க தெலங்கானா வறுமை ஒழிப்பு இயக்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து,கிரேட்டர் ஐதராபாத் உள்ளிட்ட 16 உள்ளாட்சிகளுக்கு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கிரேட்டர் ஐதராபாத், அடிலாபாத், கமாரெட்டி, கரீம்நகர், மஞ்செரியல், மெட்சல், பைனிசா,நிர்மல், அர்மூர், நிஜாமாபாத், வெமுகாலாவாட், சாத்நகர், ஹசுர்நகர், கொடாட், எல்லநாடு,பாங்கிர் ஆகிய பகுதிகளில் ரெயில் பெட்டிகள் அமைக்கப்படுகின்றன.
குடிநீர், கழிவறை
சேதமடைந்த ரெயில் பெட்டிகளை வீடில்லாத மக்கள் வசிக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, மின்வசதி, கழிவறை, உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளன. இதற்காக ரெயில்வே துறை அமைச்சகமும் ஒப்புக்கொண்டு சேதமான பெட்டிகளை கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளது.
