பெங்களூருவில் உள்ள கெம்பே கெளடா விமானநிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட 2வது முனையத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

பெங்களூருவில் உள்ள கெம்பே கெளடா விமானநிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட 2வது முனையத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

பெங்களூருவில் உள்ள கெம்பே கெளடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் 2வது முனையம் கட்டப்பட்டப்பட்டிருந்தது. இந்த 2வது முனையத்துக்கு “டெர்மினல் இ்ன் கார்டன்” என்ற பெயரும் வைக்கப்ட்டது. 

பிரதமர் மோடியின் பயண விவரமும், நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள திட்டங்களும்... முழு விவரம் உள்ளே!!

கர்நாடகம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்றும், நாளையும் பங்கேற்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூரு விமானநிலையம் வந்தார்.

பெங்களூரு விதான் சவுதா அருகே இருக்கும், கன்னடத் துறவி, கவிஞர் கனகா தாசா சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மகிரிஷி வால்மீகி சிலைக்கும் பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

பெங்களூருவில் பாஜக தொண்டர்களைப் பார்த்தும் காரை நிறுத்தி கையசைத்த பிரதமர் மோடி

அங்கிருந்து எம்எல்ஏ பவனுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுத்து பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில்வே நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து பெங்களூரு வழியாக சென்னையிலிருந்து மைசூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Scroll to load tweet…

அதன்பின், பெங்களூரு கெம்பே கெளடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட 2வது முனையத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து தேசத்துக்கு அர்ப்பணித்தார். 
2-வது முனையத்தில் 22 நுழைவு வாயில்கள், 15 பேருந்த நுழைவுவாயில்கள், 17 பாதுகாப்பு சோதனை நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அமர்வதற்காக 2வது முனையம் நுழைவுவாயில் அருகே 5ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்: டிக்கெட்விவரம்

கெம்ப கெளடா விமானநிலையத்தின் 2வது முனையம் குறித்து அதிகாரிகள் கூறுகையில் “ 2வது முனையம் என்பது கட்டிடக்கலையின் அதிசயம். இதை பூங்காவில் உள்ள முனையம் எனக் குறிப்பிடலாம். விமானநிலையத்துக்குள்ளேயும், வெளியேயும் பயணிகள் பசுமையான காட்சிகளைக் காணலாம்.

பயணத்துக்குச் செல்லும்போது, பூங்காங்களுக்கு மத்தியில் நடந்து செல்ல முடியும். தொங்கும் பூந்தோட்டம் என்றும் 2வது முனையத்தை அழைக்கலாம். இந்த 2வதுமுனையத்தில் ஆண்டுக்கு 2.50கோடி பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்