உடைந்த ரயில் இருக்கை கைப்பிடியின் புகைப்படத்தை பதிவிட்ட நபர்.. இந்திய ரயில்வே சொன்ன பதில்..

உடைந்த ரயில் இருக்கை குறித்து சமூகவலைதளத்தில் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

The person who posted the photo of the broken train seat handle.. Indian Railways responded..

இந்திய ரயில்வே தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. சில நேரங்களில் ரயில்வே உணவை பற்றி பலர் புகார் தெரிவிக்கின்றனர். மற்ற நேரங்களில் ரயில்வேயின் சேவையைப் பற்றி பலரும் சமூகவலைதளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில்,  தற்போது 'முக்தார் அலி' என்ற ட்விட்டர் பயனர் ட்விட்டரில் தற்போது, உடைந்த இருக்கை கைப்பிடியின் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

படத்தில், கைப்பிடி நாற்காலியின் பக்கத்திலிருந்து வெளியே வருவதை பார்க்க முடிகிறது. அவரின் பதிவில் "இந்த கைப்பிடியைப் பாருங்கள், 15036 இருக்கை எண் 29 C2-ல் அமர்ந்திருந்த எனது உடலின் பின்பகுதி மற்றும் கால்சட்டை சேதமடைந்துள்ளது. தயவுசெய்து இதை சரிசெய்யவும், இது மிகவும் ஆபத்தானது" என்று ரயில்வே சேவாவை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க ; காற்று மாசுபாடு ஒழுங்கற்ற இதய துடிப்பு நிலையை ஏற்படுத்தலாம்.. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

புகாருக்கு பதிலளித்த ரயில்வே சேவா, இசத்நகர் கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பிரச்சினையை தெரிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளது. அந்த பதிவில் "தயவுசெய்து உங்கள் PNR/UTS விவரங்கள் மற்றும் மொபைல் எண்ணைப் பகிரவும். முன்னுரிமை DM வழியாகப் பகிரவும். அதனால் நாங்கள் புகாராகப் பதிவு செய்யலாம். உங்கள் கவலையை நேரடியாக https://railmadad.indianrailways.gov.in இல் தெரிவிக்கலாம் அல்லது விரைவான தீர்வுக்கு 139க்கு டயல் செய்யலாம். ," என்று தெரிவிக்கப்பட்டுள்ளாது.

 

இதற்கிடையில், ட்விட்டர் பயனர், பூமிகா, ரயிலில் உள்ள உணவு குறித்து ட்விட்டரில் புகார் தெரிவித்திருந்தார். அவரின் பதிவில் “ பருப்பு, சாதம், சப்ஜி மற்றும் ரொட்டியுடன் அரைகுறையாக சாப்பிட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவர் தனது தலைப்பில், ரயில் அதிகாரிகளை சுட்டிக்காட்டி, "நீங்கள் எப்போதாவது உங்கள் சொந்த உணவை (IRCTC அதிகாரி) ருசித்திருக்கிறீர்களா? உங்கள் சொந்த குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் இதுபோன்ற மோசமான தரத்தையும் சுவையையும் தருவீர்களா?" "கைதிகளுக்கான உணவு" எனக் குறியிட்ட பூமிகா, ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை எங்கும் நியாயப்படுத்தாத, உயர்த்தப்பட்ட கட்டண விலைகளை உயர்த்திக் காட்டினார்.

இதையும் படிங்க : முழுநேர சூனியக்காரியாக மாறிய அழகுக்கலை நிபுணர்.. என்ன காரணம்..?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios