Asianet News TamilAsianet News Tamil

மும்பையில் மீண்டும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

The normal life of the people has been affected due to heavy rains in the second day in Mumbai.
The normal life of the people has been affected due to heavy rains in the second day in Mumbai.
Author
First Published Sep 20, 2017, 9:10 PM IST


மும்பையில் மீண்டும் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் இரண்டாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் செவ்வாய்க்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் 137 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மும்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனால் விமான ஓடுபாதையில் தண்ணீர் தேங்கி இருப்பதால் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதைகளில் தேங்கியிருந்த நீர் நீக்கப்பட்டு புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டுவருவதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மும்பையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. நகரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரம்படி தெற்கு மும்பை, போரிவாலி, அந்தேரி ஆகிய பகுதிகளாக கனமழை தொடர்ந்து வருகிறது.

மும்பையில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பெய்த கனமழையில் மும்பை  நகரம் வெள்ளம் போல் மிதந்தது. இந்த நிலையில் மீண்டும் கனமழை மும்பையில் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios