மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பை உயிர்பிக்க திட்டம்..? என்ஐஏ தகவலால் பரபரப்பு
சென்னையில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான பணம், தங்கக் கட்டிகள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் பல குற்றவியல் பொருட்களை என்ஐஏ கைப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் புத்துயிர் அளிக்கும் திட்டமாக இருப்பதாக என்ஐஏ தெரிவித்துள்ளார்.
என்ஐஏ சோதனை
தேசிய புலனாய்வு முகமை கடந்த வாரம் சென்னையின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் சோதனை மேற்கொண்டது. அப்போது இந்தியா மற்றும் ஶ்ரீலங்கா இடையே போதைப்பொருள் கடத்தலில் சந்தேகத்திற்குரிய வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்ட 8 நபர்களின் வீடுகள் கடைகள் சோதனை மேற்கொள்ளப்பட்டது அப்போது பணம், தங்கக் கட்டிகள், டிஜிட்டல் சாதனங்கள், போதைப்பொருள் மற்றும் ஆவணங்கள் மற்றும் பிற குற்றவியல் பொருட்களை கைப்பற்றியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக என்ஐஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் -ஆவணங்கள் பறிமுதல்
இந்த சோதனையின் ஒரு பகுதியாக 2022 டிசம்பரில் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த வியாக்கிழமைநடந்த தேடுதல் வேட்டையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மன்னடியில் ஷாஹித் அலியின் கடையில் இருந்து 68 லட்சம் ரூபாய் இந்திய பணமும், 1000 சிங்கப்பூர் டாலர்கள், 9 தங்க பிஸ்கட்கள் (மொத்தம் 300 கிராம்) கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில், இலங்கையில் போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை சென்னையைச் சேர்ந்த ஷாகித் அலி உள்ளிட்ட ஹவாலா முகவர்கள் மூலம் இந்தியாவில் விநியோகிக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள்-மீண்டும் உயிர்பிக்க திட்டம்
போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரம் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உயிர்ப்பிக்க சதி செய்த இலங்கை அகதியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான முகமது அஸ்மின் போதைப்பொருள் வர்த்தகத்தை நிர்வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
ஷாக்கிங் நியூஸ்.. ஒரே சிறையில் பெண் கைதி உட்பட 44 கைதிகளுக்கு எச்ஐவி பாதிப்பு..!