ஷாக்கிங் நியூஸ்.. ஒரே சிறையில் பெண் கைதி உட்பட 44 கைதிகளுக்கு எச்ஐவி பாதிப்பு..!
ஒரு பெண் கைதி உள்பட 44 கைதிகளுக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்டில் உள்ள சிறையில் ஒரு பெண் கைதி உள்பட 44 கைதிகளுக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் சிறை உள்ளது. இந்த சிறையில் 1629 ஆண் கைதிகளும், 70 பெண் கைதிகளும் உள்ளனர். இந்நிலையில், இந்த சிறையில் அடுத்தடுத்து கைதிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஒரு பெண் கைதி உள்பட 44 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த சிறையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக ஏஆர்டி (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையம் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், மருத்துவர்கள் குழு சிறையில் உள்ள கைதிகளை தொடர்ந்து பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாதிப்பு எண்ணிக்கை உயருமா என்பது பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்.