மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாய் உடல் கொண்டு செல்லப்படுகிறது. வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, அத்வானி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக முன்னணி தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயை புகழ்ந்து தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றன.

முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை 5.05 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று  பொதுமக்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பா.ஜ.க. தலைவர் அத்வானி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து வாஜ்பாயின் உடலில்ட தேசியக்கொடி போர்த்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில், பாஜக அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக யமுனை நதி தீரத்தில் அமைந்துள்ள, ராஜ்காட்-விஜய்காட் பகுதிக்கு கிளம்பியது.

ஆனால் இதில் ஒரு வியப்புக்குரிய விஷயம் நடைபெற்றுள்ளது. இருப்பினும் வாஜ்பாய் உடல் செல்லும் வாகனத்தின் அருகே பிரதமர் நரேந்திர மோடி நடந்தபடியே சென்றார். அவருடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் அவருடன் நடந்து செல்கிறார்.  தங்கள் தலைவர் வாஜ்பாய் மீது வைத்திருந்த அன்பையே இந்த சம்பவம் வெளிகாட்டுவதாக கூறப்படுகிறது.