எப்போதும் பிரதமர் மோடி கூடவே சென்று பாதுகாப்பு கொடுப்பது யார் தெரியுமா?
துப்பாக்கிகள் மற்றும் க்ளோக் பிஸ்டல்களை ஏந்தியபடி SPG குழுவினர் பிரதமருடன் இருப்பார்கள். அவர்கள் எப்போது தங்கள் அடையாளமான கருப்பு உடையில் இருப்பார்கள்.
2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் தனது முதல் சுதந்திர தின உரையைத் முடித்து தனது காரில் ஏறும் முன் திடீரென குழந்தைகள் காப்பகத்திற்குச் சென்றபோது, அவரது பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டது. பிரதமரின் இந்த செயல், குழந்தைகளைப் பரவசப்படுத்தியது.
தேசிய விழாக்களில் பின்பற்றப்படும் நெறிமுறையிலிருந்து பிரதமர் விலகிச் சென்றது அதுவே முதல் முறை. அப்போது பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஎஜி (SPG) பாதுகாப்புக் குழுவினருக்கு மாற்றுப்பாதைக்குத் தயாராக இல்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக, பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.
செங்கோட்டையில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக டெல்லி காவல்துறை, துணை ராணுவப் படைகள் மற்றும் எஸ்பிஜியைச் சேர்ந்த 10,000 பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
துப்பாக்கிகள் மற்றும் க்ளோக் பிஸ்டல்களை ஏந்தியபடி SPG குழுவினர் பிரதமருடன் இருப்பார்கள். அவர்கள் எப்போது தங்கள் அடையாளமான கருப்பு உடையில் இருப்பார்கள். சுதந்திர தினம் அல்லது குடியரசு தினம் போன்ற பெரிய நிகழ்வுகளின்போது அவர்களிடம் உள்ள ஆயுதங்களை வெளிப்படையாகக் காணலாம். வான்வழித் தாக்குதல்களளில் இருந்து பாதுகாப்பதற்கும் சிறப்பான கண்காணிப்பு இருக்கும்.
பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மூலையிலும் நடக்கும் நிகழ்வுகள் வீடியோ கண்காணிப்பில் இருக்கும். எனவே அனைத்து நடவடிக்கைகளும் உடனுக்குடன் காவல் கட்டுப்பாட்டு அறையின் கவனத்துக்குக் கிடைக்கும்.