ஜம்மு காஷ்மீர் பகுதியில் இறந்து போன போராளி ஒருவரின் சடலத்தினை, இராணுவ வீரர் ஒருவர் கயிற்றில் கட்டி தரதரவென இழுத்து சென்றிருக்கிறார்.  இறந்த பிறகு அந்த் உடலை இப்படி இழுத்து செல்வது ஒருவகையில் அவமரியாதை தரக்கூடிய மனிதத்தன்மை அற்ற செயலாகும்.இதனால் அந்த ராணுவ வீரரின் நடவடிக்கை ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ஆம்புலன்ஸ் நிருத்தி வைக்கப்பட்டிருந்திருக்கிறது, அதனை முன்னோக்கி கொண்டுவந்திருந்தாலே போதுமானது.  ஆனால் அவ்வாறு செய்யாமல் அந்த போராளியின் சடலத்தை ரோட்டில் இழுத்து சென்றிருப்பது வேண்மென்றே தான் செய்யப்பட்டிருக்கிறது என சமூக ஆர்வலர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அப்பகுதியை சேர்ந்த ஹிந்துத்துவ அமைப்பின் துணை தலைவர், காவி உடையில் அந்த போராளியின் சடலத்தின் அருகே நின்று செல்ஃபி எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். 

ஏற்கனவே போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே பூசல் நடந்து கொண்டிருக்கும் அந்த பகுதியில், இது போன்ற செயல்களில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல ஆகி இருக்கிறது. எதிரியாகவே இருந்தாலும் இறந்த உடலுக்கு மரியாதை தருவது தான் மனிதம், ஆனால் இங்கு நிகழ்ந்திருக்கும் சம்பவம் அந்த மனிதத்தன்மையையே கேள்விக்குறி ஆக்கி இருக்கிறது.