The incident that led to the killing of a 6 year old girl in Haryana has caused fear.

அரியானா மாநிலத்தில் 6 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படு்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள உக்லானா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது தாயாருடன் சிறுமி ஒருவர் தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதைதொடர்ந்து சிறுமி வீட்டின் அருகே உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைதொடர்ந்து சிறுமியின் பெற்றோரும் மற்றும் உறவினரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.