the important post in congres party for actress kuththu ramya
மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துவரும் நடிகை ரம்யாவை சமூக ஊடகத்துறையின் தலைவராக நியமிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குத்து, பொல்லாதவன் உள்பட சில தமிழ்ப் படங்களிலும் ஏராளமான கன்னட படங்களிலும் நடித்திருப்பவர் ரம்யா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஆளுநரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜனதாவில் இணந்தவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி ரம்யா ஆவார்.
கடந்த 2012-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரம்யா, மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். 2014ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஜனதா தளம் வேட்பாளரிடம்ரம்யா தோல்வி அடைந்தார்.
சமூக ஊடகங்களான டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் ரம்யாதனது கருத்துக்களை ஆளும் பா.ஜனதா கட்சிக்கு எதிராக துணிச்சலாக தெரிவித்து வருகிறார். இதனால், இவரைப் பின் தொடர்பவர்கள் டுவிட்டரில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர்சேர்ந்துவிட்டனர்.
நக்சலைட்டுகள் தாக்குதலில் 25 துணைநிலை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்தும் பா.ஜனதா அரசு கடுமையாக விமர்சித்துரம்யா கருத்துக்களை வௌியிட்டார். இது டுவிட்டரில் அவரை பின் தொடர்பவர்களிடம் மட்டுமின்றி காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் மிகுந்த வரவேற்பையும், ஆதரவையும் பெற்றது.
இதைத் தொடர்ந்து நடிகை ரம்யாவுக்கு காங்கிரசில் 20 பேர் கொண்ட அமைப்பான சமூக ஊடகத்துறையின் தலைவராக பதவி கொடுக்க துணைத்தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது சமூக ஊடகப் பிரிவின் தலைவராக இருக்கும் தீபிந்தர் கூடாவுக்கு வேறு பதவி கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
