BBC Modi Documentary:பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப், ட்விட்டரில் வெளியிடத் தடை
பிரதமர் மோடி குறித்து பிபிசி சேனல் தயாரித்துள்ள குஜராத் கலவரம் தொடர்பான “இந்தியா: தி மோடி குவெஸ்டின்”(India: The Modi Question) ஆவணப்படத்தை ட்விட்டர் மற்றும் யூடியூப்பில் வெளியிட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
பிரதமர் மோடி குறித்து பிபிசி சேனல் தயாரித்துள்ள குஜராத் கலவரம் தொடர்பான “இந்தியா: தி மோடி குவெஸ்டின்”(India: The Modi Question) ஆவணப்படத்தை ட்விட்டர் மற்றும் யூடியூப்பில் வெளியிட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக 50 வகையான ட்விட்கள் இந்த திரைப்படம் குறித்த லிங்குகளை தாங்கி வந்தன. அவற்றை தடை செய்து உத்தரவிட்டுள்ளது
கடந்த 2022ம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான கலவரமும் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தேசியஅளவிலும், சர்வதேச அளவிலும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் பிபிசி சேனல், பிரதமர் மோடி குறித்து “ India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம் இரு பகுதிகளாக எடுக்கப்பட்டுள்ளது. முதல்பகுதி படம் கடந்த செவ்வாய்கிழமை வெளியானதுமுதல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கோத்ரா கலவரத்தில் சிறுபான்மையினர்களை பாதுகாக்க அப்போது இருந்த பாஜக அரசும், குஜராத் காவல் துறையும் தவறிவிட்டது என்று கோத்ரா கலவரம் குறித்து விசாரித்த பிரிட்டன் எம்.பி.க்கள் குழு இந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆவணப்படம் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியத் தொடர்ந்து உடனடியாக நீக்கப்பட்டது.
இந்த ஆவணப்படத்தை பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டன் எம்.பி. இம்ரான் ஹூசைன் எடுத்துள்ளார். 2022 கோத்ரா கலவரம் என்பது இன அழிப்பு என்று அவர் விமர்சித்துள்ளார்.
நிக்கா ஹலாலா, பலதார மணம் குறித்து விசாரிக்க தனி அரசியல்சாசன அமர்வு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
இந்த ஆவணப்படம் குறித்து மத்திய அரசு கூறுகையில் “ இந்தியாவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை புனிதப்படுத்துவதை இந்தியஅதிகாரிகள் விரும்பவில்லை.
பாரபட்சமாக, உண்மைத்தன்மை இல்லாமல், கண்ணியத்தன்மையற்று, முற்றிலும் காலணி ஆதிக்க மனோநிலையுடன் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது” எனக் கண்டித்தது
இந்நிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சக்தின் செயலாளர் அபூர்வா சந்திரா, ஐடிவிதிகல் 2021, அவசரகார அதிகாரத்தைப் பயன்படுத்தி, யூடியூப் மற்றும் ட்விட்டரில் மோடி குறித்த ஆவணப்பட லிங்க்குகளை தடை செய்ய நேற்று திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த திரைப்படம் இந்தியாவுக்கான பிசிசியில் இல்லை, ஆனால், சில யூடியூப் சேனல்கள் இந்தியாவுக்கு எதிரான மனநிலையை பிரதிபலிக்கும் நோக்கில் இதை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தின் முதல்பகுதி வெளியான அனைத்து யூடியூப் தளங்கள், ட்விட்டரை பிளாக் செய்ய மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இது தொடர்பாக 50வகையான வெப் லிங்க்குகள் தடை செய்யப்பட்டன.
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்பட சர்ச்சை என்ன? மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது?
அதுமட்டுமல்லாமல் தங்கள் தளத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் பதிவேற்றம் செய்யக்கூடாது என்று யூடியூப் நிர்வாகமும் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு ஏதேனும் இருந்தால் அந்த லிங்குகளை கண்டறிந்து பிளாக் செய்து, அவற்றை பட்டியலிடவும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் ஓ பிரையன் கூறுகையில் “ தணிக்கைமுறை, பிபிசி ஆவணப்படம் குறித்த எனது ட்விட்டை ட்விட்டர் நீக்கிவிட்டது. எனக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கிடைத்தனர். சிறுபான்மையினரை பிரதமர் மோடி எவ்வாறு வெறுத்தார் என்பதை ஒருமணிநேர ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
- BBC
- BBC Documentary
- BBC Modi Documentary
- I&B Ministry
- India: The Modi Question
- bbc documentary modi
- bbc india modi documentary
- bbc on modi
- bbc pm modi
- bbc the modi question
- documentary on modi bbc
- india the modi question
- modi documentary
- narendra modi bbc
- narendra modi bbc documentary
- watch bbc documentary on modi
- Ministry of Information and Broadcasting