Asianet News TamilAsianet News Tamil

Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

கடும் வெப்ப நிலை காரணமாக, வரும் மே 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது.

The government has announced that all schools will be closed from May 14 due to the extreme heat
Author
India, First Published May 1, 2022, 1:19 PM IST

நாடு முழுவதும் கோடைகாலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் உள்பட பல பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. அதுபோல நாட்டில் பல பகுதிகளில் கோடை வெப்பம் மேலும் கடுமையாகி 50 டிகிரி செல்சியஸை தாண்டலாம் அதாவது 122 ° F ஐ தாண்டலாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

The government has announced that all schools will be closed from May 14 due to the extreme heat

தலைநகர் டெல்லி உள்பட குறிப்பிட்ட 6 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப நிலை சாதாரண வரம்புகளை விட சில புள்ளிகள் அதிகமாகவே காணப்படுகிறது. 

அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியசும், லூதியானாவில் 43.2 டிகிரி செல்சியசும் மற்றும் ஜலந்தரில் 42.7 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக, வரும் மே 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க : முஸ்லீம் கடையில் டீ குடிக்காதீங்க.. ஆண்மைக்குறைவு ஏற்படும் - சர்ச்சையை கிளப்பிய எம்.எல்.ஏ !!

இதையும் படிங்க : பாஜகவை ஜெயிக்க ஒரு வழிதான் இருக்கு..3வது அணிக்கு வாய்ப்பில்ல ராஜா.. பி.கே சொன்ன மாஸ்டர் பிளான் !

Follow Us:
Download App:
  • android
  • ios