The girl relationship with the police! Inspector suspended

கணவனை பிரிந்து வாழும் பெண் போலீஸ் அதிகாரியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை, பெண் போலீஸ் அதிகாரியின் தாய் செருப்பால் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. இதனால் தெலங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் சுனிதா ரெட்டி. இவருக்கும் கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியே வசித்து வருகிறார். விவாகரத்து தொடர்பான வழக்கு தெலங்கானா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில், ஐதராபாத் கல்வகுர்த்தி பகுதியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மல்லிகார்ஜூனாவுக்கும், சுனிதா ரெட்டிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுனிதா ரெட்டியின் கணவரான சுரேந்தர் ரெட்டி, பலமுறை கண்டித்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும், சுனிதா ரெட்டி, கணவர் கூறுவதை கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.

இந்த நிலையில், சுனிதா ரெட்டியும், மல்லகார்ஜூனாவும், வீட்டில் இருந்தபோது, உறவினர்களுடன் சுரேந்தர் திடீரென நுழைந்து, அவர்களை கையும் களவுமாக பிடித்தார். 

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சுனிதாவின் தாயார், காவல் ஆய்வாளர் மல்லிகார்ஜூனாவை செருப்பால் தாக்கியுள்ளார். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சுனிதா ரெட்டியின் தாயார் அளித்த புகாரைத் தொடர்ந்து மல்லிகார்ஜூனா, தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சுனிதா மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

காவல் ஆய்வாளர் மல்லிகார்ஜூனாவை, சுனிதா ரெட்டியின் தாயார் செருப்பால் தாக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.