குஜராத் வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

கனமழை காரணமாக குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இதற்கான பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில மீட்பு குழு மற்றும் ராணுவமும் களமிறங்கி உள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்போதைய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  சுமார் 25 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். 

குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தினால் பனாஸ்காந்தா, சாபார்காந்தா, ஆனந்த், பதான் மற்றும் வால்சாத் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளது. 

பனாஸ்காந்தா மாவட்டத்தில் மட்டும் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து சுமார் 11 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

வடக்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவில் பெய்த கனமழையால் சபர்மதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இந்நிலையில், பிரதமர் மோடி குஜராத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் படுகாயமடைந்தவருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வெள்ளத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டால் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.