Asianet News TamilAsianet News Tamil

சிலிண்டர் விலை மீண்டும் ரூ.203 உயர்வு.! ஓட்டல்களில் உணவுகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு

வணிக பயன்பாட்டிற்காக சிலிண்டர் விலை 203 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதம் வரை 1,695 ரூபாய்க்கு விற்பனையான சிலிண்டர் இன்று 1,898 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

The cylinder price for commercial use has been increased by Rs 203 KAK
Author
First Published Oct 1, 2023, 7:22 AM IST

கடந்த மாதம் குறைந்த சிலிண்டர் விலை இன்று மீண்டும் அதிகரிப்பு

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.  அந்த வகையில் பொதுமக்கள் நலன் கருதி வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் சிலிண்டரின் விலையில் 200ரூபாய் கடந்த மாதம் குறைக்கப்பட்டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 400 ரூபாய் குறைக்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.  

The cylinder price for commercial use has been increased by Rs 203 KAK

203ரூபாய் அதிகரிப்பு

அதே போல  கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.158 குறைக்கப்பட்டது. அதன் படி சென்னையில் 1695 ரூபாய்க்கு விற்பனையானது.  இந்தநிலையில் தற்போது வணிக பயனபாட்டிற்கான சிலிண்டர் விலை அக்டோபர் 1ஆம் தேதி முதல் 203 ரூபாய் அதிகரித்து 1898 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios