bihar: nitish: congress: பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் புதிய ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4 அமைச்சர் பதவி
பீகாரில் புதிதாக அமைய இருக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4 அமைச்சர்கள் பதவி அல்லது சபாநாயகர் பதவி கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
பீகாரில் புதிதாக அமைய இருக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4 அமைச்சர்கள் பதவி அல்லது சபாநாயகர் பதவி கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
பீகாரில் பாஜகவுடன் சேர்ந்து 2 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சி நடத்திவந்தது. ஆனால், பாஜக தலைமைக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையிலான மனக்கசப்பால், கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, பாஜக கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார், ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமாவை வழங்கினார்.
‘யு டர்ன் ராஜா’ நிதிஷ் குமார், மோடியைச் சமாளிப்பாரா? 2024- தேர்தலில் பிரதமர் வேட்பாளரா?
அடுத்ததாக ராஷ்டரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைக்க உள்ளார். இன்று பிற்பகல் நடக்கும் பதவி ஏற்பு விழாவில் புதிய முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவி ஏற்கிறார்கள்.
முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தவுடனே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நிதிஷ் குமார் பேசியுள்ளார். தனக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சிக்கும் அப்போது நிதிஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமாருக்கு துரோகம் செய்வது கைவந்த கலை: பாஜக விளாசல்; மாநிலம் முழுவதும் இன்று போராட்டம்
இந்நிலையில் பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் அமையும் புதியஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4அமைச்சர்கள் பதவி கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே காங்கிரஸ்கட்சி சபாநாயகர் பதவியையும் கேட்கிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதிஷ் உடன் உறவு முறிவு: பாஜவுக்கு பின்னடைவா? NDAவிலிருந்து 3வது பெரிய கட்சியும் விலகல்
243 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 43 எம்எல்ஏக்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 79, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிக்கு 12, சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இதற்கிடையே நேற்று மாலை நடந்த கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாருடன், மாநில காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா, பொறுப்பாளர் பக்த சரண் தாஸ் ஆகியோர் இருந்தனர். இதன்பின் நடந்த விருந்து நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.