Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகை.. - இனிமே எங்கே வேணும்னாலும் வேலை செய்வாங்க…

The Central Ministry of Health has issued an order.
The Central Ministry of Health has issued an order.
Author
First Published Nov 27, 2017, 9:29 PM IST


மத்திய அரசு ஊழியர்கள் தாங்கள் பணி செய்யும் இடத்தை விட்டு வேறு இடத்துக்கு தற்காலிகமாக பணியாற்றச் செல்லும் ‘டெபுடேஷன்’ பணிக்கு கூடுதல் ‘அலவன்ஸ்’ அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய பணியாளர்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

மத்திய 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களின் ‘டெபுடேஷன்’ பணிக்கு அலவன்ஸ் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ. 4 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இது குறித்து மத்திய அரசின்  பணியாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

மத்திய அரசு பணியாளர்களுக்கு ஒரே பகுதியில் ‘டெபுடேஷன்’ பணி ஒதுக்கீடு செய்யப்பட்டால், அதற்கான ‘அலவன்ஸ்’ (படி) அடிப்படை ஊதியத்தில் இருந்து 5 சதவீதமாக  அதிகபட்சமாக மாதத்துக்கு ரூ.4,500 வரை இனி வழங்கப்படும்

அதேசமயம், ஒரு அலுவலகத்தில் இருந்து வேறு ஒரு அலுவலகத்துக்கு சென்று தற்காலிகமாக அயல்பணி செய்தால், அதற்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அதிகபட்சம் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்கப்படும். மேலும், அகவிலைப்படி உயர்த்தப்படும்போது, மேலும், இந்த படி 25 சதவீதம் ஒவ்வொரு முறை உயர்த்தப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டெபுடேஷன் பணிக்கான அலவன்ஸ் அடிப்படை ஊதியத்தில் இருந்து 5 சதவீதமும், அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் வரை ஒரே நிலையத்தில் பணி செய்தால் கிடைத்து வந்தது.  அதே சமயம், வெளியூர்களில் பணி செய்தால், 10 சதவீதமும், மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் வரை கிடைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios