Asianet News TamilAsianet News Tamil

மாட்டு வண்டி பந்தயத்துக்கான தடை நீடிப்பு - அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு

The Bombay High Court refused to ban the ban on the involvement of cattle.
The Bombay High Court refused to ban the ban on the involvement of cattle.
Author
First Published Oct 11, 2017, 7:48 PM IST


மஹாராஷ்டிரா மாநிலத்தில், மாட்டு வண்டிப் பந்தயம் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது,  போட்டியில் கலந்து கொள்வதற்கான உடல் அமைப்பைப் மாடுகள் பெறவில்லை. இதில் மாடுகளை ஈடுபடுத்துவது கொடுமைப்படுத்துவதாகும என்று கூறி தடையை நீக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சட்டத்திருத்தம்

 ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் விலங்குகள் வதைதடுப்புச் சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதியும், ஜனாதிபதியிடம் ஒப்புதலும் பெறப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடந்தன.

மாட்டுவண்டி பந்தயம்

இதை அடிப்படையாக வைத்து மஹராஷ்டிரா மாநிலத்தில் மாட்டு வண்டிப்பந்தயத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அந்த மாநில அரசு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவந்து, மாட்டுவண்டிப் பந்தயத்துக்கு அனுமதி வழங்கியது.

தடை

இந்த அனுமதியை எதிர்த்து புனே நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்அஜெய் மராத்தே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு ஏற்று கடந்த ஆகஸ்ட் 16-ந்தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘மாட்டுவண்டிப் பந்தயத்தை மாநிலத்தில் எந்தப் பகுதியிலும் நடத்த அரசு அனுமதிக்க கூடாது’ என்றுகூறி தடை விதித்தது.

விசாரணை

இந்நிலையில், அந்த வழக்கின் விசாரணை நேற்று தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி என். எம். ஜம்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அனுமதிக்க வேண்டும்

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் அசிப் சினோய் வாதிடுகையில், “ மாட்டு வண்டி போட்டியை நடத்த பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளை கொடுமைப்படுத்தினால் அதன் உரிமையாளர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்படும், போட்டியைவீடியோ பதிவு செய்யப்பட உள்ளது, மேற்பார்வையிடவும் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆதலால், கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கி,  போட்டிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கொடூரமானது

இதையடுத்து தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி என். எம்.ஜம்தர் பிறப்பித்த உத்தரவில், “ மாட்டு வண்டிப்பந்தயத்தில் ஈடுபடுவதற்காக இயற்கையாகவே மாடுகள் உடல்ரீதியாக  அமைப்பைப் பெறவில்லை.அப்படி இருக்கும் போது மாடுகளை போட்டியில் ஈடுபடுத்துவது என்பது கொடூரமானது.

உடல்அமைப்பு மாறுமா?

சட்டத்தை திருத்துவதன் மூலம் மாடுகளின் உடல் அமைப்பைமாற்றிவிட முடியுமா? அதை போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றுவிட்டதா?. என்ன விதமான பாதுகாப்பு நடவடிக்ைககளைநடைமுறைப்படுத்துகிறீர்கள்?. காளை மாடுகள் என்பது, குதிரைகள், நாய்கள் மற்றும் கிளிகளில் இருந்து மாறுபட்ட விலங்கினம். அவ்வாறு போட்டியில் காளைமாடுகளை ஈடுபடுத்தினால், அது கொடுமைப்படுத்துவதாகும்.

எப்படி முடியும்

காளை மாடுகள் விவசாயம் அது தொடர்பான பணிகளில்தான் ஈடுபடுத்த முடியும். உடல்ரீதியாக இதுபோன்ற போட்டிகளுக்கு மாடுகள் தகுதியில்லாதபோது, எப்படி நீங்கள் பந்தயத்துக்கு பயன்படுத்த முடியும். இந்த சட்டத்திருத்தம் என்பது கடந்த 2014ம் ஆண்டு பிறப்பித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணக்கமாக இல்லை என்பது தெரியவருகிறது.

நீங்கள் செய்யும் சட்டத்திருத்தம் மூலம் மாடுகளுக்கு நேரும் கொடுமை தடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் நினைத்தால், அது உங்களின் வேண்டுகோளை  ஏற்று அனுமதிக்கும். 
ஆதலால், மாட்டுவண்டி பந்தயம் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios