The boat capsized in the Mediterranean Sea - 200 refugees killed

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இத்தாலிக்கு புகலிடம் தேடிச்சென்ற அகதிகளின் படகு மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கிய விபத்தில் 200-க்கும் அதிகமானோர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

அகதிகள்

உள்நாட்டு போர் நடைபெறும் லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் மக்கள் பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய வருகின்றனர். சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு வரும் அவர்கள் மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரை விடுகின்றனர். இச்சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் அகதிகள் படகுகளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அவர்களது படகு மத்திய தரைக்கடலில் லிபியா அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அகதிகள் வந்த 2 படகுகள் கடலில் மூழ்கின.

கடற்படை

அந்த படகுகளில் 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். தகவல் அறிந்ததும் இத்தாலி கடற்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். மூழ்கிய படகுகளில் இருந்து 5 பேரை பிணமாக மீட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பொதுவாக லிபியாவில் இருந்து இத்தாலி வழியாக அகதிகள் புறப்பட்டு வருகின்றனர்.

ஆனால் துருக்கி மற்றும் கிரீஸ் இடையே வரும் போது கடல் சீற்றத்தால் தண்ணீரில் மூழ்கி பலியாகின்றனர். இந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரம் அகதிகள் புறப்பட்டு வந்ததாகவும் அவர்களில் 559 பேர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகவும் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.