Lok Sabha : தேர்தல் முடிவுக்கு பிறகு கூடுகிறது மக்களவை.. அசூர பலத்தில் எதிர்கட்சிகள்.! கூட்டணி பலத்தில் பாஜக

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு மக்களவை இன்று முதல் முறையாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தில் நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் எழுப்பப்படவுள்ளது. 

The 18th Lok Sabha session begins today MPs will be sworn in at today's meeting KAK

மக்களவை கூட்டம் - உறுப்பினர்களுக்கு பதவிபிரமாணம்

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது. 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என நம்பிய பாஜகவிற்கு தேர்தலில் பின்னடைவே கிடைத்தது. 240 தொகுதிகளை மட்டுமே பாஜக தனித்து பெற்றது. இந்தியா கூட்டணி 235 தொகுதிகளை பிடித்தது. இதனையடுத்து நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவில் மத்தியில் 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இதனையடுத்து இன்று மக்களவை முதல் முறையாக கூடுகிறது. தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று பதவிபிரமாணம் செய்து வைத்தார். 

RAIN ALERT : 5 மாவட்டங்களில் இன்று கன மழை எச்சரிக்கை.! எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா.?

The 18th Lok Sabha session begins today MPs will be sworn in at today's meeting KAK

அசூர பலத்தில் எதிர்கட்சிகள்

இன்று காலை 11 மணிக்கு தொடங்கவுள்ள மக்களவை முதல் கூட்டத்தில் 18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்குகிறது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் மேற்கொள்ளவுள்ளனர். இன்று முதல் நாளில் 280 பேரும். நாளை 263 உறுப்பினர்களும் பதவியேற்கவுள்ளனர். இதனைதொடர்ந்து 26-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெறும். 27-ம் தேதி இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

இந்த 18வது மக்களவையின் முதல் கூட்டத்தில் எதிர்கட்சிகள் அசூர பலத்தில் இடம்பிடித்துள்ளது. கடந்த இரண்டு மக்களவை தேர்தலிலும் எதிர்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் பெறாத நிலையில் இன்று 100 மக்களவை உறுப்பினர்களோடு மக்களவையில் எதிர்கட்சியாக அமரவுள்ளது. இதே போல திரிணாமுல் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட கட்சிகளும் பெரும்பலத்தோடு மக்களவையில் இடம்பிடித்துள்ளது. எனவை இந்த மக்களவை கூட்டத்தில்  தற்காலிக சபாநாயகர் தேர்வு, நீட் தேர்வு முறைகேடு, ரயில் விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Vikravandi : சூடு பிடிக்காத விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! காரணம் என்ன.? களத்தில் எத்தனை பேர் போட்டி தெரியுமா.?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios