வௌ்ளையனே வௌியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு விழாவையொட்டி, மக்களவையில் நேற்று சிறப்பு விவாதம் நடந்தது. இதில் அ.தி.மு.க கட்சியின் எம்.பி. எம். தம்பிதுரை தமிழலில் பேசத் தொடங்கினார்.  அப்போது அவையில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்களுக்கு தமிழ் புரியவில்லை என்பதால், சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக எம்.பி.க்கள் முன்கூட்டியே அவைத்தலைவரிடம் தமிழில் பேச அனுமதி  பெறவில்லை, உடனடியாக மொழிமாற்றத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கூச்சலிட்டனர்.

மேலும், தமிழில் பேசுவதாக இருந்தால் முன்கூட்டியே அவையில் முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும் என சில உறுப்பினர்கள் எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.

அப்போது பேசிய அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன், இருமொழிகளில் மட்டுமே மொழிமாற்றும் வசதி இருக்கிறது. விரைவில் தொழில்நுட்ப வசதியுடன், அனைத்துமொழிகளிலும் மொழிமாற்றும் செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

அதிமுக எம்.பி. தம்பிதுரையின் நேற்றைய பேச்சு என்பது, சமீபகாலமாக மாநிலங்கள் மீது இந்தி மொழியை வலுக்கட்டாயமாக மத்திய அரசு திணிப்பதை சுட்டிக்காட்டுவதாக இருந்தது. குறிப்பாக தென்மாநிலங்களில் மொழி என்பது உணர்வுப்பூர்வமாக மக்களால் பார்க்கப்படும் நிலையில், இந்தி மொழித்திணிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகத்தில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இந்தியில் எழுதப்பட்ட பெயர்பலகைகளை கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் மை மூலம் அழித்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.