ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 200 தீவிரவாதிகள் செயல்பட்டுக்‍கொண்டிருப்பதாகவும், அவர்களில் நூற்றுக்‍கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, எல்லைப் பகுதியில் தாக்‍குதல் நடத்திவரும் பாகிஸ்தான் படையினருக்‍கு, இந்திய ராணுவம் தக்‍க பதிலடி கொடுத்துவருகிறது.

எல்லைக்‍கு அப்பாலிருந்து இந்தியாவுக்‍குள் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபட, தீவிரவாதிகளுக்‍கு பயிற்சி அளித்து பாகிஸ்தான் அனுப்பி வருகிறது.

அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் வரை 105 தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவி இருப்பதாகவும், ஏற்கெனவே இம்மாநிலத்தில் செயல்பட்டுவரும் தீவிரவாதிகளையும் சேர்த்து 200 தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வருவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் திரு. Hansraj Gangaram Ahir தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்‍க பல்வேறு நடவடிக்‍கைகளை மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.