காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், ராணுவ முகாம் உட்பட 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் சோபியானில் உள்ள காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 போலீசார் படுகாயமடைந்தனர்.

இந் நிலையில், ராணுவ முகாம் உள்ளிட்ட மேலும் இரண்டு இடங்களிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி சில போலீஸ் அதிகாரிகளின் அலுவகத்தையும் தீவிரவாதிகள் சிதைத்துள்ளதாகவும், இந்த தாக்குதலில் ஏற்பட்டுள்ள பலி எண்ணிக்கை நிலவரம் பின்னர் தான் தெரியவரும் என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

அதன் எதிரோலியாகவே பயங்கராவதிகள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.