Terrorist attack
தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழக வீர் பலி…சோகத்தில் மூழ்கிய விழுப்புரம் மாவட்டம் கழுமரம் கிராமமம்..
சத்தீஸ்கரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது நக்சல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் தமிழக வீரர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் பாஜக வைச் சேர்ந்த ரமன் சிங் முதலமைச்சராக உள்ளார். இங்குள்ள சுக்மா மாவட்டத்தில் வனப்பகுதியில் பதுங்கியுள்ள நக்ஸலைட்டுகளால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகளுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படும் என்பதால், சிஆர்பிஎப் வீரர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் வெடிகுண்டுகள் வீசியும்,துப்பாக்கியால் சுடட்டும் தாக்குதல் நடத்தினர்.
இதில் சிஆர்பிஎப் வீரர்கள் 12 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.மேலும் சிஆர்பிஎப் வீரர்களின் ஆயுதங்களையும் பறித்துச் சென்றனர்.
படுகாயமடைந்த மேலும் சில வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த கழுமரம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் சங்கர் என்பவரும் கொல்லப்பட்டார்.
