telgi died
முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த தெல்கி, பெங்களூருவில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 56.
2001 ஆம் ஆண்டில் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் அப்துல் கரீம் தெல்கி கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.202 கோடி அபராதமும் நீதிமன்றம் வித்தது.
தெல்கி, கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் தெல்கிக்கு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தெல்கி, விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மூளை அழற்சி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தெல்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
