பாம்பை வாயில் வைத்து சாகசம்: வைரலாக நினைத்து உயிரை விட்ட பரிதாபம்
தெலங்கானா மாநிலத்தில் சமூக வலைதளத்தில் வைரலாக நினைத்து பாம்பை வாயில் வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபர் பாம்பு கடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
தெலங்கானாவின் கமரெட்டி மாவட்டத்தில் உள்ள தேசிபேட் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 20). சமூக ஊடகங்களில் வைராலாக வேண்டும் என்பதற்காகவும், இணையத்தில் அதிக பார்வைகளைப் பெறுவதற்காகவும் நாகப்பாம்பின் தலையை வாய்க்குள் வைத்து வீடியோ பதிவு செய்ய முயன்றார். ஆனால் இந்த சாகசம் அவரது உயிருக்கு வினையாகியுள்ளது.
வீட்டு கரண்ட் பில் ஒவ்வொரு மாசமும் ஷாக் அடிக்குதா? இந்த வழிய பாலோ பண்ணுங்க செலவு பாதியாகிடும்
பாம்பு பிடிப்பவராக தனது தந்தையுடன் பணியாற்றி வந்த சிவராஜ், தனது தந்தையுடன் சேர்ந்து நாகப்பாம்பைப் பிடித்தார். வாட்ஸ்அப்பில் பகிர்வதற்காக பாம்புடன் வீடியோ பதிவு செய்யுமாறு அவரது தந்தை அவரை ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், சிவராஜ் சாலையின் நடுவில் நாகப்பாம்பின் தலையை வாய்க்குள் வைத்துக்கொண்டு நிற்கிறார். பாம்பு தப்பிக்க முயற்சிக்கிறது. சிவராஜ் மடித்த கைகளுடன் கேமராவைப் பார்க்கிறார். கிளிப் முடியும் முன் அவர் தனது தலைமுடியைத் தடவி, கட்டை விரலை உயர்த்துகிறார்.
Teacher Shankar Profile: மகாவிஷ்ணுவை ஓட ஓட கதறவிட்ட தமிழாசிரியர்! யார் இந்த சங்கர்?
பாம்புகளைப் பற்றிய அனுபவம் இருந்தபோதிலும், நாகப்பாம்பு சிவராஜை உடனடியாகக் கடித்து, அதிக அளவு விஷத்தை செலுத்தியது. இதனால் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். அவரது மரணம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது, பலர் ஆன்லைனில் பிரபலமடைய மக்கள் எந்த அளவுக்கு ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதால், இளைஞர்கள் சமூக ஊடக புகழுக்காக தங்கள் உயிரை பணயம் வைக்க வேண்டாம் என்று அதிகாரிகளும், சமூக ஆர்வளர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.