அசராமல் பெரிய பாம்பை கையில் பிடித்து போஸ் கொடுத்த தமிழிசை!

விலங்குகள் முழு சுதந்திரமாய் உலகில் வாழ மனிதர்கள் துணை நிற்க வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்

Telangana governor tamilisai soundararajan pose with snake on world animal day smp

உலக விலங்குகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாக கொண்ட இந்த நாள், ஜெர்மனியின் பெர்லினில் ஹென்ரிச் சிம்மர்மேன் என்பவரால் முதன்முதலில் 1925ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

அதன்பிறகு, 1931ஆம் ஆண்டு மே மாதம் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் நடந்த சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு மாநாட்டில், அக்டோபர் 4ஆம் தேதி உலக விலங்குகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. விலங்குகள் நல ஆர்வலரான இத்தாலியின் புனித பிரான்சிஸ் ஆப் அசிசியின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில், உலக விலங்குகள் தினம் கொண்டாடப்படுகிறது.

தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு: இதுதான் சரியான சான்ஸ்!

இந்த நிலையில், விலங்குகள் முழு சுதந்திரமாய் உலகில் வாழ மனிதர்கள் துணை நிற்க வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். விலங்குகள் தினத்தையொட்டி, பெரிய மலைப்பாம்பை கையில் பிடித்தபடி தாம் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், “உலகில் மனிதர்களின் வாழ்விடமும்,வாழ்வாதாரமும் எவ்வளவு முக்கியமோ, அதேபோல விலங்குகளின் வாழ்விடமும், வாழ்க்கை முறையும் முக்கியமானதாகும். விலங்குகளுக்கு ஆபத்து விளைவிக்காமல் அவை முழு சுதந்திரமாய் இந்த உலகில் வசிக்க மனிதர்களாகிய நாம் அனைவரும் துணை நிற்போம்.” என அழைப்பு விடுத்துள்ளார்.

 

 

மேலும், விலங்குகளை பாதுகாப்பது, அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் 4ஆம் தேதி உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது எனவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios