தேர்தல் பிரச்சாரத்தின் போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, பாஜகவின் பி அணி என்று ராகுல்காந்தி கூறியிருந்தார். இந்நிலையில் தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவின் ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என பாஜக அறிவித்துள்ளது.

மத்தியபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத்த தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ளது. 119 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் தேவை. இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட 3 கருத்து கணிப்பில் டிஆர்எஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில பா.ஜ.க தலைவர் கே.லட்சுமண் கூறியதாவது:- தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம். காங்கிரஸ், எம்.ஐ.எம். ஆகியவைதான் எங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆகும். அவர்களை ஆட்சி அமைக்க விடமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, பாஜகவின் பி அணி என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே விமர்சித்திருந்தார். ஆனால் தற்போது அது நிருபணமாகியுள்ளது.