தெலுங்கானா அமைச்சரவை.. பதவியேற்ற அமைச்சர் தனாசாரி அனசூயா.. அரங்கை அதிரவைத்த கரவொலி - யார் இந்த சீதக்கா?
Telangana Minister Seethakka : அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இதனையடுத்து புதிய தெலுங்கானா முதல்வர் ஏ ரேவந்த் ரெட்டியுடன், 11 அமைச்சர்கள் ஐதராபாத்தில் உள்ள எல்பி ஸ்டேடியத்தில் நேற்று வியாழக்கிழமை பதவியேற்றனர்.
ஆனால் சீதக்கா என்று அழைக்கப்படும் தன்சாரி அனசூயா என்பவரை பதவிப் பிரமாணம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டபோது கூட்டத்தில் இருந்து பலத்த கரகோஷம் எழுந்தது. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 52 வயதான அரசியல்வாதி சீதக்கா, முலுகு (எஸ்டி-ஒதுக்கீடு) தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். அவருக்கு இம்முறை பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) நல அமைச்சகத்தின் இலாகா ஒதுக்கப்படும்.
சீதக்கா, ஜனசக்தி என்ற நக்சல் குழுவில் சேர்ந்து தனது 14 வயதில் கையில் துப்பாக்கியை ஏந்தியவர் என்று கூறப்படுகிறது. ஏழை கோட்டி கோயா பழங்குடியின குடும்பத்தில் பிறந்த அவர், ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காக போராட முடிவு செய்தார், தனது வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்து அவர்களுக்காக வாழ துவங்கினார்.
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு.. மருத்துவமனையில் அனுமதி.!
ஆனால் 1997 வாக்கில், 11 வருடங்கள் காடுகளிலும், பிற இடங்களிலும் பதுங்கி வாழ்ந்து வந்த அவர், வன்முறை எதற்குமே தீர்வாகாது என்பதை பின்னர் புரிந்துகொண்டார். தான் ஏந்திய ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, அதிகாரம் தான் நமக்கான விடியலை தரும் என்பதை உணர்ந்து செயல்பட துவங்கினார் சீதக்கா.
பின்னர் கல்வியைத் தொடரத் தொடங்கினார் அவர் மற்றும் தனது வாழ்வாதாரத்திற்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் போது சட்ட படிப்பில் பட்டம் பெற்றார். வாரங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரியும் போது, அவர் ஏழை மற்றும் ஏழைகளுக்கு, குறிப்பாக காவல்துறையினரின் துன்புறுத்தலை எதிர்கொண்ட பழங்குடியினருக்கு சட்ட உதவியை வழங்க துவங்கினார்.
GPAI 2023 உச்சிமாநாடு.. வரும் 12-ம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..
பின் அரசியலில் களமிறங்க முடிவு செய்த அவர், சில ஆண்டுகாலங்கள் கழித்து தெலுங்கு தேசம் கட்சியில் தனது சக ஊழியராக இருந்த ரேவந்த் ரெட்டியுடன் காங்கிரஸில் சேர்ந்தார், மேலும் 2018 தேர்தலில் அதன் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார்.