இந்த திட்டம் முதல்கட்டமாக டெல்லி-லக்னோ இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன்படி தேஜஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் ரயில்தாமதமாக வந்து ஒரு மணிநேரம்வரை காத்திருந்தால், அதற்கு 100 ரூபாய் இழப்பீடு தரப்படும், 2 மணிநேரம் வரை ரயில்தாமதமாக வந்தால், ஒவ்வொரு பயணிக்கும் தலா ரூ.250 இழப்பீடாக வழங்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் தேஜஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டாலே பயணிகளிடம் இருந்து எந்தவிதமான கட்டணமும் வசூலிக்காமல் ரூ.25லட்சம் விபத்துக்காப்பீடு ஒவ்வொரு பயணிகளுக்கும் வழங்கப்படும். மேலும், பயணி ரயலில் பயணிக்கும் போது திருட்டு, கொள்ளை ஏதும் நடந்து பொருட்களை பறிகொடுத்தால், அதற்காக ரூ.ஒரு லட்சம் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக ரயில் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் முதல்முறையாக தேஜஸ் ரயிலில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டெல்லி-லக்னோ இடையே ஐஆர்சிடிசி இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில்தான் நாட்டிலேயே முதல்முறையாக தனியார் மூலம் இயக்கப்படும்ரயிலாகும்.

இந்த ரயிலை லக்னோவில் இருந்து டெல்லிக்கு வரும் 4-ம் தேதி உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இந்த ரயில் 6-ம் தேத டெல்லி சென்றடையும். வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.