தேஜஸ் போர் விமானத்தின் ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த சாதனை இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு ஒரு மைல்கல் ஆகும். 

India's Tejas Fighter Jet: Missile test successful in Odisha: பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தல்களாக விளங்கி வருகின்றன. இதனால் இந்தியா ராணுவ அமைப்பை தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து போர் விமானங்களை வாங்கி வரும் இந்தியா, உள்நாட்டிலும் போர் விமானங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. 

தேஜஸ் இலகுரக போர் விமானம் 

இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் இலகுரக போர் விமானம் மூலம் ஆஸ்ட்ரா ஏவுகணையை செலுத்தி துல்லியமாக இலக்குகளை தாக்கும் சோதனை ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது தேஜஸ் இலகுரக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஆஸ்ட்ரா ஏவுகணை எதிர்பார்த்தபடி மிகத் துல்லியமாக 
வானில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது. 

ஏவுகணை சோதனை வெற்றி 

''பறக்கும் இலக்கை ஏவுகணை நேரடியாக தாக்குவதை இந்த சோதனை வெற்றிகரமாக நிரூபித்தது. அதன் அனைத்து துணை அமைப்புகளும் அனைத்து பணி அளவுருக்கள் மற்றும் நோக்கங்களை துல்லியமாக பூர்த்தி செய்தன'' என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆஸ்ட்ரா ஏவுகணை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இது 100 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா! குவிந்த பெண்கள்! ஆண்களுக்கு அனுமதி இல்லை!

இந்திய விமானப்படையில் சேர்ப்பு

இந்த ஏவுகணை மேம்பட்ட வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது இலக்குகளை அதிக துல்லியத்துடன் அழிக்க அனுமதிக்கிறது. இந்த ஏவுகணை ஏற்கனவே இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜஸ் ரக இலகு ரக போர் விமானங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

பாதுகாப்பு அமைச்சகம் பெருமிதம்

தேஜஸ் இலகுரக போர் விமானத்தின் ஏவுகனை தாக்குதல் சோதனை வெற்றி நாட்டின் குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் இது நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றுவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு போட்டி அளிக்கும் வகையில் இந்தியாவும் போர் விமானங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

அமெரிக்கா தனது F-35 ஐ இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ளது. ரஷ்யாவும் தனது சுகோய்-57 ஐ இந்தியாவிற்கு வழங்குவதாகக் கூறியுள்ளது. மேலும் ரஷ்யாவின் உதவியுடன் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்குவது குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முதல் சைவ உணவு ரயில்! அசைவம் விற்கவும் வைத்திருக்கவும் தடை!