கோவா Casinoவில் 25 லட்சம் வென்ற நபர்.. உற்ற நண்பர்களே செய்த படுபாதக செயல் - கயவர்களை தேடும் போலீசார்!

பெங்களூருவில் டீ கடை வியாபாரம் செய்து வரும் திலக் எம் மணிகண்டா என்பவர், தனது நண்பர்களுடன் சில நாட்களுக்கு முன்பு கோவா சென்றிருந்தபோது, ​​சூதாட்ட விடுதியில் சுமார் ரூ.25 லட்சம் ரூபாயை வென்றுள்ளார் அந்த நபர். இந்நிலையில் இவரிடம் இருந்து பணத்தை திருடிய நபர்களை தற்போது போலீசார் தேடி வருகின்றனர்.
 

Tea vendor who won 25lakhs in goa casino kidnapped by his dear friends

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி, பெங்களூரில் வசித்து வரும் 32 வயதான சாலையோர தேநீர் வியாபாரி ஒருவர், கோவா சென்று அங்குள்ள கேசினோவில் சூதாடியுள்ளார், அதில் அவருக்கு ரூ. 25 லட்சம் கிடைத்துள்ளது. சூதாடி அவ்வளவு பெரிய பணம் கிடைத்த நிலையில் மிகழ்ச்சியில் திளைத்த திலக் பெங்களூரு திரும்பியுள்ளார். 

ஆனால் அவர் பெங்களூரு திரும்பிய சில நாட்களில் அவருடைய மகிழ்ச்சி முற்றிலும் குலைந்து போயுள்ளது, அதற்கு காரணம் அவர்களுடைய நண்பர்கள் தான் என்று தற்போது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் அவர். 

என்ன நடந்தது?

போலீசாரிடம் அளித்த தகவலின்படி, கடந்த ஜூலை 30-ம் தேதி மணிகண்டா தனது நண்பர்களுடன் கோவா சென்றுள்ளார், அப்போது சூதாடுவதற்காக சுமார் ரூ.4 லட்சத்தை எடுத்துச் சென்றுள்ளார் அவர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி, பனாஜியில் உள்ள மெஜஸ்டிக் பிரைட் கேசினோவில் சூதாடிய மணிகண்டா, அங்கு ரூ.25 லட்சத்தை வென்றுள்ளார். ஆனால் அவர் பணம் வென்ற விஷயத்தை மணிகண்டா தனது நண்பர்களிடம் தெரிவிக்கவில்லை என்றும், பணம் அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கையோடு மனைவியை அடித்தே கொன்ற நபர்!

இந்த சூழலில் மணிகண்டாவின் போலீஸ் புகாரின்படி, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, மணிகண்டா பெங்களூரு திரும்பிய ஒரு நாள் கழித்து, அவர் ஒரு கடையின் அருகே நின்று புகைபிடித்துக்கொண்டிருந்தபோது, ​​​​அவரது நண்பர்கள் கார்த்திக், பாண்டு, ஈஷ்வர், நிஷ்சல் மற்றும் பலர் அவரை அணுகி, தங்களுடன் வருமாறு கூறியுள்ளனர். 

அவர்களிடம் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள் வருகின்றேன் என்று அவர் கூறிய நிலையில், அவர்கள் ​அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, பெங்களூரு பல்கலைக்கழகத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு மொபைல் பேங்கிங் மூலம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.15 லட்சத்தை அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 5ம் தேதி காலை 11 மணி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8 மணி வரை, குற்றம் சாட்டப்பட்டவர் மணிகண்டாவை பல தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார்கள் என்றும், இறுதியில் அவரை நெலமங்களாவில் உள்ள ஒரு ரிசார்ட் அறையில் அடைத்து வைத்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது மணிகண்டா தனது நண்பர்கள் மீது, பணம் திருட்டு, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். 

நீதியே முக்கியம்.. இனி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இருக்காது - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios