வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம்  மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- டிடிஎஸ் வரிப்பிடித்தம் அடுத்த ஆண்டு மார்ச் வரையில் 25 சதவீதம் குறைக்கப்படும். டிடிஎஸ் வரிப்பிடித்தம் குறைப்பு நடவடிக்கை நாளை முதல் அமலுக்கு வருகிறது. டிடிஎஸ் வரிப்பிடித்தம் குறைப்பதால் மக்களின் கைகளில் பணப்புழக்கம் ரூ.50,000 கோடி அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். 

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூலை வரை தரப்படும் அவகாசம்  நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கும் பிஎப் தொகையை மத்திய அரசு செலுத்தும். இதற்காக 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.67 லட்சம் நிறுவனங்கள், 72.25 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். பி.எப்., தொகையை அரசே செலுத்துவதால், நிறுவனங்களுக்கு ரூ.6,500 கோடி மிச்சமாகும். அடுத்த காலாண்டில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் 10 சதவீதம் பிஎப் தொகை செலுத்தினால் போதும். தொழிலாளர், ஊழியர்கள் நலன் கருதி 2 சதவீதம் குறைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.