Taxation for pets
பஞ்சாப் மாநிலத்தில் வீட்டில் விலங்குகளை வளர்ப்பதற்கு வரி செலுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, நாய் பூனை, பன்றி, செம்மறி, மான் போன்றவற்றிற்கு ஆண்டுதோறும் ரூ.250 செலுத்த வேண்டும எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எருது, குதிரை, மாடு, யானை போன்றவைகளுக்கு ரூ.500 வரியாக செலுத்த வேண்டும் எனவும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
வரி செலுத்தப்பட்டு வளர்க்கப்படும் விளங்குகளை அடையாளம் காணும் வகையில் முத்திரை மற்றும் அடையாள எண் அளிக்கப்படுவதாகவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
வீட்டு விலங்குகளுக்கு அளிக்கப்படும் முத்திரைகளில் இயந்திர சிப்புகள் பொருத்தப்படும் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
