மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையேற்றத்தினை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தேர்வானது தமிழகம்!!
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமையேற்றத்தினை ஊக்குவிப்பதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டமாக சேலமும் தேர்வாகியுள்ளது. இதுமட்டுமின்றி 2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் உரிமையேற்றத்திற்கான தேசிய விருதிற்கு தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) பிரகடனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தேசிய அளவில் சிறப்பாக சேவை புரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியன தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்கள் மத்திய அரசின், சமூக நீதி மற்றம் அதிகாரம் வழங்கும் மாற்றுத் திறனாளிகள் நலன் அமைச்சகத்தால், கௌரவிக்கப்படவிருப்பதால் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிபவர்கள்/சுயதொழில் புரிபவர்கள், சிறந்த பணியமர்த்தப்படும் அலுவலர் / நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பாக சேவை புரிந்த தனிநபர் / நிறுவனம், மாற்றுத் திறனாளிகளில் முன்னோடியாகத் திகழ்பவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையிலான சிறந்த செயல்முறை ஆராய்ச்சி பணி/தொழில் நுட்பம் அல்லது கண்டுபிடிப்புகளுக்கு, மாற்றுத் திறனுடையோருக்கு தடையற்ற சூழ்நிலையை ஏற்படுத்திய சிறந்த பணிக்காக, மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கிய சிறந்த மாவட்டம், தேசிய மாற்றுத் திறனுடையோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் திட்டத்தினை செயல்படுத்தும் மாநில அளவிலான முறைப்படுத்தும் நிறுவனம், சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனுடைய நபர்கள், சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனாளி குழந்தைகள், சிறந்த பிரெய்லி அச்சகம், மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய சிறந்த இணையதளம், மாற்றுத் திறனாளிகளின் அதிகார பகிர்வினை ஊக்கப்படுத்தும் சிறந்த மாநிலம், சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் ஆகிய 14 பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமையேற்றத்தினை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடும், மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டமாக சேலமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் உரிமையேற்றத்திற்கான தேசிய விருதிற்கு தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமையேற்றத்தினை ஊக்குவிப்பதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டமாக சேலம் மாவட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், மாற்றுத் திறனாளிகளில் சிறந்த நபர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறந்த சேவை வழங்கியவர்களுக்கு மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வரிசையில், இந்த ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சிறந்த பணியாளர் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளாக வேங்கட கிருஷ்ணன், (பார்வை திறன் குறையுடையோர் பிரிவு), ஏழுமலை (பார்வை திறன் குறையுடையோர் பிரிவு), தினேஷ், (அறிவுசார் குறைபாடுடையோர் பிரிவு), மானக்ஷா தண்டபாணி, (பல்வகை குறைபாடுடையோர் பிரிவு), சிறந்த சான்றாளர் / முன்னுதாரணம் பிரிவுக்கான விருது, ஜோதி (பல்வகை குறைபாடுடையோர் பிரிவு), பிரபாகரன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெறவுள்ள சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.