தமிழக தம்பதி கேரளாவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரள மாநிலம் கண்ணூர் அருகே குட்டிக்கல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சுதீஷ் (30). தமிழகத்தை சேர்ந்த சுதீஷ், குட்டிக்கல் பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இசக்கிராணி என்ற ரேஷ்மா (20). சுதீஷ் நேற்று தற்கொலை செய்து கொள்ள போவதாக அவரது நண்பர் ஒருவருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். 

உடனே இதுதொடர்பாக தளிப்பரம்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் சென்று பார்த்த போது சுதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது மனைவியும் வி‌ஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனையடுத்து, இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீட்டில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. தமிழக தம்பதி கேரளாவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.