இலங்கையின் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த தமிழரான சின்னையாவுக்கு இலங்கைக் கடற்படையில்  தளபதியாக பதவி வழங்கிய இலங்கை அரசு இரண்டே மாதத்தில் அவரின் பதவியைப் பறித்துள்ளது. இதற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இலங்கைக் கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழர் டிராவிஸ் சின்னையா என்பவரை இலங்கை அரசு நியமித்தது. 

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடற்படையின் 21 வது தளபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.

இதனால் தமிழர்களிடையே  சிரிசேனாவின் மீது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவகியது. 

இந்த நம்பிக்கை 2 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. 2 மாதங்கள் இலங்கைக் கடற்படைத் தளபதியாக இருந்த தமிழரான ரியட் அட்மிரல் டிராவிஸ் சின்னையாவை நீக்கிவிட்டு சிங்கள இனத்தைச் சேர்ந்தவரான ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்காவை  புதிய கடற்படை தளபதியாக ஜனாதிபதி சிறிசேனா நியமித்துள்ளார். சிறிமெவன் ரணசிங்கா வைஸ் அட்மிரலாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து இலங்கை ஜனாதிபதி சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு தமிழர்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.