தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்கள் வரிசையிலோ, அனைவரும் கல்வி அறிவு பெற்ற மாநிலப் பட்டியலிலோ முதலிடத்திற்கு வராத தமிழ்நாடு,  அதிக வேகத்தால் ஏற்படும் உயிரிழப்புகளில் மட்டும் தொடர்ந்து முதலிடத்தை பெற்று வருகிறது.

தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்கள் வரிசையிலோ, அனைவரும் கல்வி அறிவு பெற்ற மாநிலப் பட்டியலிலோ முதலிடத்திற்கு வராத தமிழ்நாடு, அதிக வேகத்தால் ஏற்படும் உயிரிழப்புகளில் மட்டும் தொடர்ந்து முதலிடத்தை பெற்று வருகிறது.

விபத்து செய்திகள் இல்லாத நாளே கிடையாது, அதிலும், குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்கள் நடப்பதை பார்க்கிறோம். நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஆங்காங்கே விபத்து பகுதிகளை பார்க்கமுடியும். இதில், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அதிவேகத்தால் ஏற்படும் விபத்து ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 

தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) 2021ம் ஆண்டில் நிகழ்ந்த அதிவேக சாலை விபத்துகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் பெரும்பாலான சாலை விபத்துகள் அதிக வேகம் காரணமாக என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 59.7 சதவீத பேர் அதிகவேகத்தால் வாகனத்தை இயக்கியதன் காரணமாகவே விபத்தில் சிக்கியவர்களே அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

அதிக வேகமாக வாகனத்தை இயக்கியதால் 4,03,116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2,28,274 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகவேகமாக வாகனத்தை இயக்கியதால் விபத்தில் சிக்கி (55.9%) 87,050 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதிக வேகத்தால் ஏற்படும் சாலை விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் இதுவரை 11,419 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 13.1 சதவீதம் பேர் இறந்துள்ளனர். அதை தொடர்ந்து கர்நாகாவில் 8,797 விபத்துகளில் 10.1 சதவீதம் பேர் இறந்துள்ளனர். குறிப்பாக இந்த விபத்துகள் அனைத்தும் அதிகவேகமாக வாகனத்தை இயக்கியதேத காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டை காட்டிலும் 2021ம் ஆண்டில் 16.8 சதவீதம் சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டு சாலை விபத்து வழக்குகள் 3,54,796 இல் இருந்து 2021இல் 4,03,116 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சாலை விபத்துகளால் உயிரிழப்பர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. 100 வாகனங்கள் விபத்தில் சிக்கினால் 0.53 சதவீதம் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கள் அனைத்தும் அதிவேகமாக வாகனதத்தை இயக்கியதே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.